News March 24, 2025

ஈரோட்டில் வேலை வாய்ப்பு: இன்று கடைசி நாள்

image

ஈரோடு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும். மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

Similar News

News December 6, 2025

சென்னிமலை அருகே பெண் விபரீத முடிவு

image

சென்னிமலை அடுத்த மணிமலை கரடு பகுதியைச் சேர்ந்தவர் மோகனப்பிரியா (34). இவர் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த மாதம் 15-ம் தேதி வீட்டில் இருந்த தின்னரை உடலில் ஊற்றித் தீக்குளித்தார். ​உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் 18 நாட்களாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 6, 2025

ஈரோட்டில் கோடி கணக்கில் மோசடி: அதிர்ச்சி

image

ஈரோடு திருநகர் காலனி பகுதியில் தனியார் சங்கம் சார்பில் அதன் கணக்காளர் ராஜேந்திரன் என்பவர் ஏல சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பல லட்சங்களை முதலீடு செய்த நிலையில், பணத்தை திரும்பத் தராமல் ரூ.4 கோடி மோசடி செய்ததோடு ராஜேந்திரன் தலைமறைவாகியுள்ளார். இதுதொடர்பாக ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கேட்டு புகார் அளித்துள்ளனர்.

News December 6, 2025

பெருந்துறை: 18 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை அதிரடி தீர்ப்பு!

image

பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக வெளிநாட்டினா் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், பெருந்துறை காவல் ஆய்வாளா் தெய்வராணி தலைமையிலான போலீஸாா் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அங்கு சென்று விசாரணை நடத்தினா். அதில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 18 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

error: Content is protected !!