News March 24, 2025
ஈரோட்டில் வரி செலுத்திய மக்கள்

ஈரோடு மாநகராட்சியில் 2024-2025ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை வருகின்ற மார்ச்.31 வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று வரிகளை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இன்று (24) காலை சம்பத் நகர் மாநகராட்சி கிளை அலுவலகத்தில் பொதுமக்கள் வரிசையில் நின்று வரிகளை செலுத்தி சென்றனர்.
Similar News
News October 14, 2025
ஈரோடு மக்களே அவசியம் பாருங்க!

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை <
News October 14, 2025
ஈரோடு: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
News October 14, 2025
ஈரோட்டில் சோகம் வாலிபர் பலி

வெள்ளோடு அடுத்துள்ள கருக்கங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ், 24. இவர் கீழ்பவானி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில், அவர் வாய்க்கால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 நாளாக தேடி அவர் சடலமாக மீட்டனர். இது குறித்து வெள்ளோடு போலீசார் விசாரிக்கின்றனர்.