News January 22, 2025
ஈரோட்டில் ரயில் மோதி தொழிலாளி பலி!

ஈரோடு,கொல்லம்பாளையம் காட்டு தெருவில் வசித்த தொழிலாளி மூர்த்தி 56. பொங்கல் பண்டிகைக்காக சகோதரி வீட்டுக்கு வந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. எட்டு ஆண்டுகளாக காது கேட்காது. நேற்று மதியம் ஊஞ்சலுார்-பாசூர் ரயில்பாதையை கடக்க முற்பட்டார். அப்போது ஈரோடு-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மோதியதில், தலை துண்டாகி பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 9, 2025
ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் ஆன்லைன் தளங்களில் உருவாக்கி முன் பின் தெரியாத நபர்களிடம் இருந்து வீடியோ கால் அழைப்புகள் வரும்என்பதால் எடுக்க வேண்டாம் அவ்வாறு
எடுப்பதினால் நமது புகைப்படத்தை பதிவு செய்து ஆபாசமாக
சித்தரித்து நம்மிடம் பணம் பறிக்கக்கூடும் என ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
News November 9, 2025
ஈரோட்டில் முற்றிலும் இலவசம்!

ஈரோடு: தென்னை மரத்தில் ரூர்கோஸ் வெள்ளை சுருள் ஈ பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு, 1,700 -ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள், – ஈரோட்டில் உள்ள வட்டார தோட்டக்கலை துறை சார்பாக இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா, ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் தோட்ட கலை அலுவலகத்தை அணுகலாம்.ஷேர் பண்ணுங்க
News November 9, 2025
ஈரோடு: G Pay, PhonePe இருக்கா?

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


