News April 9, 2025
ஈரோட்டில் மதுக்கடைகளை மூட உத்தரவு

ஈரோடு மாவட்ட நிர்வாகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில், மகாவீரா் ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், பார்கள், மனமகிழ் மன்ற மதுகூடங்கள், நட்சத்திர ஹோட்டல் மதுக்கூடங்கள், சுற்றுலா துறை மூலம் நடத்தப்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுவகைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. மீறினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News September 16, 2025
ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது!

சத்தியமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அம்மாசை தலைமையிலான காவல்துறையினர் ஜெய்சக்திமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 4 பேர் வட்டமாக அமர்ந்து பணத்தை வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தை சேர்ந்த நடராஜ், முனுசாமி, ராஜா, வேலுச்சாமி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
News September 15, 2025
ஈரோடு: இழப்பீடு தொகை வேண்டுமா?

ஈரோடு மாவட்டத்தில் தற்பொழுது 2026 ஆம் ஆண்டு பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மக்காசோளம், துவரை, நிலக்கடலை, ராகி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்து இழப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். இதற்கு உரிய ஆவணங்களுடன் கடைசி நாளான நாளை செப்.16 மாலை 5 மணிக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT
News September 15, 2025
ஈரோடு மாவட்ட காவலர்கள் இரவு நேர ரோந்து பணி விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (செப். 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும், கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.