News January 24, 2025

ஈரோட்டில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் ஈரோடு தாலுகா தவிர்த்து, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, கோபி, பவானி, சத்தி உள்ளிட்ட 9 தாலுகாவிலும் உள்ள ரேஷன் கடைகளில், நடக்கும் முகாம்களில், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். ரேஷன் கார்டு புதுப்பித்தல், பெயர் நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கு மனு வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

Similar News

News November 12, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

image

பெண்களின் பாதுகாப்பிற்கான “<>காவலன் செயலி<<>>”, ஆபத்தான சூழ்நிலைகளில் அவசர உதவிக்கு உதவும் ஒரு செயலி, இந்தச் செயலியில் உள்ள SOS பொத்தானை அழுத்துவதன் மூலம், உங்கள் இருப்பிட விவரங்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அனுப்பப்படும், இதனால் விரைவான உதவி கிடைக்கும். செயலியில் உள்ள (Kavalan Help) ஆப்பை உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News November 12, 2025

ஈரோடு: கோயில்களில் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

image

தமிழகத்தில் உள்ள இந்து சமயத்தை சேர்ந்த பல்வேறு கோயில்களை தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயில்களில் சாமி தரிசன கட்டண வசூல், அன்னதானம், பராமரிப்பு குறைபாடு, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை தேவை குறித்த புகார் மற்றும் கோரிக்கையை இங்கு <>கிளிக் செய்து<<>> பதிவு செய்யலாம். இதை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

ஈரோட்டில் 53 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை

image

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஈரோடு மாவட்ட எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொழிலாளா், எடையளவு விதிமீறல்கள் குறித்து கடந்த அக்டோபா் மாதம் 145 கடைகள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் எடையளவு விதி, தொழிலாளர் விதி மீறல் தொடா்பாக 53 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

error: Content is protected !!