News August 24, 2024
ஈரோட்டில் பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில், பாஜக உறுப்பினர் சேர்க்கை-2024 பயிலரங்கம், ஈரோடு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் தலைமை வகித்தார். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி மற்றும் மொடக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ சரஸ்வதி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை பற்றிய வழிகாட்டுதல்களை வழங்கினர்.
Similar News
News February 23, 2026
ஈரோடு: உங்க வீட்டில் குழந்தை இருக்கா? முக்கிய தகவல்!

ஈரோடு மாவட்டத்தில் பிப்.23 முதல் 28 வரை (புதன் நீங்கலாக), வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இது வழங்கப்படும். கண் பார்வை குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கேட்டுக்கொண்டுள்ளார். SHAREIT
News February 23, 2026
திண்டல் முருகன் கோயில்: 207 அடி உயர சிலைக்கு அடிக்கல்!

ஈரோடு, திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ரூ.5 கோடி மதிப்பிலான 5 நிலை ராஜகோபுரம் மற்றும் புதிய சன்னதிகளுக்கு அமைச்சர்கள் சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து, இக்கோயிலில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள பிரமாண்டமான 207 அடி உயர முருகன் சிலை பணிகளுக்கும் அமைச்சர்கள் இன்று அடிக்கல் நாட்டினர்.