News August 11, 2024

ஈரோட்டில் நாளை மின்சாரம் நிறுத்தம்

image

ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. எனவே வீரப்பம்பாளையம் சாலை, ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலசு, கருவில்பாறை, சூளை, அன்னை சத்யாநகர், முதலிதோட்டம், ஈ.பி.பி.நகர், கந்தையன் தோட்டம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News

News November 7, 2025

ஈரோடு வரும் CM ஸ்டாலின்

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 26, 27-ம் தேதிகளில் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்போது, இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்று முடிவுற்ற திட்ட பணிகளையும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் துவக்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News November 7, 2025

ஈரோடு: 10 PASS போதும்..! ரூ.50,000 வரை சம்பளம்

image

ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு போதும். தேர்வு: நேர்காணல் மூலம். கடைசிநாள்: நவ.9-ம் தேதி ஆகும். https://www.tnrd.tn.gov.in/இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். (சொந்த ஊரில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News November 7, 2025

ஈரோடு: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!