News March 25, 2025
ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் மார்ச்.28ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களையோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார். (Share பண்ணுங்க)
Similar News
News December 9, 2025
சென்னிமலை அருகே சோகம்: விவசாயி பலி

சென்னிமலை அடுத்த கவுண்டனூரைச் சேர்ந்தவர் மாகாளி (63). விவசாயக் கூலியான இவர், கடந்த 6-ம் தேதி காலை அங்குள்ள வயல்வெளியில் மயங்கிக் கிடந்தார். தகவலறிந்து வந்த மகன் பாலகிருஷ்ணன், அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். பரிசோதனையில் அவருக்குத் தலையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மாகாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 9, 2025
சென்னிமலை: மகளுக்கு பாலியல் தொல்லை தந்தை கைது

சென்னிமலை அருகே 16 வயது சிறுமிக்கு, அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தாய் வங்கி வேலைக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து, சிறுமி தாய்க்கு தகவல் அளித்தார்.உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்ட தாய், சென்னிமலை போலீசில் புகாரளித்தார். இதன் பேரில் வளர்ப்புத் தந்தை மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
News December 9, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098 என்ற எண்ணை அழைக்கவும்.


