News August 14, 2024
ஈரோட்டில் சோதனைக்கு பின் அனுமதி

ஈரோடு ரயில் நிலையத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு வந்த ரயில்களில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளின் உடைமைகளை
சோதனை செய்த பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Similar News
News December 5, 2025
ஈரோடு: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

ஈரோடு மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!
News December 4, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (04/12/2025)சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 4, 2025
அறிவித்தார் ஈரோடு ஆட்சியர்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் உள்ள 19,97,189 வாக்காளா்களில் புதன்கிழமை வரை 19,28,231 (96.55 சதவீதம்) படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 68,958 வாக்காளா்களிடம் கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்பட வேண்டியுள்ளன. மீதமுள்ள படிவங்களை திரும்பப் பெறுவது குறித்து பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தார்.


