News March 5, 2025
ஈரோட்டில் உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு

ஈரோட்டில் உள்ள உணவகங்களில் இட்லி தயாரிப்பின்போது பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுகிறதா என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். இட்லி தயாரிப்பின்போது துணிக்கு பதில் பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வந்தன. இதனை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கருங்கல்பாளையம் இட்லி கடை, ஹோட்டல்கள், சிற்றுண்டி போன்ற இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
Similar News
News November 26, 2025
கோபிசெட்டிப்பாளையம் MLA ராஜினாமா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கோபி எம்எல்ஏ செங்கோட்டையன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், கோபியில் அவரது வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். செங்கோட்டையன் ராஜினாமா செய்தது, அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
News November 26, 2025
ஈரோடு: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
ஈரோடு: ஈஸியா பட்டா பெறுவது எப்படி?

ஈரோடு மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)!


