News September 15, 2024

ஈரோட்டில் இவ்வளவு பேர் ஆப்சென்ட்டா?

image

தமிழ்நாட்டில் குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்றது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 25,475 பேர் குரூப் 2 தேர்வு விண்ணப்பித்திருந்தனர். இதில் 18,943 பேர் தேர்வு எழுதினர். 6,532 பேர் தேர் எழுத வரவில்லை. மேலும் ஈரோடு – தெற்குப்பள்ளம், தி பாரதி வித்யா பவன் பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வினை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

Similar News

News October 19, 2025

ஈரோடு மக்களே இன்று கவனம்!

image

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்படுள்ளது. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!

News October 19, 2025

ஈரோட்டில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் கனிராவுத்தர் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுகிறதா என சோதனை செய்தனர். அப்போது தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபான விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

News October 19, 2025

ஈரோடு அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

ஈரோடு, பவானி அருகே கேசரிமங்கலம் பிரிவு பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பவானி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, உயிரிழந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!