News September 13, 2024
ஈரோடு BUS STAND-இல் அபராதம்!

ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பஸ்களில் தடைசெய்யப்பட்ட ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா? அனுமதி பெறப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறதா? கூடுதல் பயண கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவைநாதன் தலைமையில் நேற்று ஆய்வுசெய்யப்பட்டது. முறையான வழித்தட விவரம், கட்டண விவரம் இல்லாதது, சீட் பெல்ட் அணியாமல் பஸ்களை இயக்கியதாக 10 ஓட்டுநர்கள் மீது வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News November 23, 2025
ஈரோடு: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

ஈரோடு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே<
News November 23, 2025
திம்பம் மலைப்பாதையில் விபத்து

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை 27 கொண்டைஊசி வளைவுகளை அடக்கியது. மலைப்பாதையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வாழைக்காய் பாரம் ஏற்றுக் கொண்டு மினி சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
News November 23, 2025
ஈரோட்டில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்படி காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டறிந்தனர். வீட்டிற்குள் சோதனை செய்தபோது ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தனுஷ் ,குரு பிரகாஷ் இருவரை கைது செய்தனர்.


