News August 17, 2024
ஈரோடு: 60 ஆண்டு கனவு இன்று நனவாகிறது!

ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். பவானி நீரேற்று நிலையப் பகுதியில் இதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,450 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
Similar News
News December 18, 2025
ஈரோடு: சத்துணவு மையத்தில் வேலை

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 64 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்-ரூ.3000 முதல் ரூ.9,000 ஆகும். விண்ணப்பங்களை https://erode.nic.in/ என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து ஜன.9.26-க்குள் மாநகராட்சி, நகராட்சி அலுவலங்களில் வழங்க வேண்டும். (வேலைதேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)
News December 18, 2025
யார் இந்த காலிங்கராயன்

லிங்கையன் கவுண்டர் என்ற இயற்பெயர் கொண்டர். இவர் 13-ம் நூற்றாண்டில் முக்கியப் பங்காற்றினார். வீரபாண்டியனின் படைத்தளபதியாகி, தலைமை அமைச்சராக உயர்ந்தார். இவருக்கு வீரபாண்டியனால் “காலிங்கராயன்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர் கட்டிய கால்வாயின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தின் 5-ம் தேதி “ காலிங்கராயன் தினம்” கொண்டாடப்படுகிறது.
News December 18, 2025
ஈரோடு: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!


