News November 22, 2024

ஈரோடு: 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

image

சூழலியல் மாற்றம் காரணமாக தற்போது மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 20 நாட்களில், மாநகராட்சி பகுதியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், போதிய மருந்துகள் இருப்பில் உள்ளது என மாநகர நகர்நல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 18, 2025

ஈரோடு: போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு!

image

ஈரோடு: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் முன்பு போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், ஓட்டுநர் உரிமம் இன்றி இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது, காப்பீடு இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது, மது போதையில் வாகனங்களை ஓட்டக் கூடாது, 18 வயதுக்குட்பட்டவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News September 18, 2025

ஈரோட்டில் தெரிய வேண்டிய முக்கியமான செயலி!

image

ஈரோடு மாவட்ட காவல்துறை பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு, இணையவழி மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், யாரும் ஏமாற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது. “காவல் உதவி” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அவசர உதவிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 18, 2025

ஈரோடு: நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி!

image

ஈரோடு: சென்னிமலை, முகாசிப்பிடாரியூர் ஊராட்சி, சென்னியங்கிரி வலசையைச் சேர்ந்தவர் விவசாயி கவிதா. இவர் தோட்டத்தில் 57 செம்பறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று(செப்.17) இரவு இந்த ஆடுகளை பட்டியில் அடைத்துள்ளார். தெரு நாய்கள் 3 மேற்பட்ட நாய்கள் பட்டியல் புகுந்து 29 ஆடுகளை கடித்துள்ளன. இதில் 7ஆடுகள் இறந்துவிட்டன. 22 ஆடுகள் காயம் அடைந்துள்ளன.

error: Content is protected !!