News October 25, 2024
ஈரோடு: 249 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவந்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் இணையதளம் மூலம் மொத்தம் 265 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி 249 கடைகளுக்கு அனுமதியும், 7 கடை விண்ணப்பங்கள் நிராகரிப்பும், மீதமுள்ள 9 கடை விண்ணப்பங்கள் தொடர்பாக ஆய்வு நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 21, 2025
கோபி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

கோபி மதுவிலக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவல்துறையினர் கவுந்தப்பாடி ஆலத்தூர் பாலக்காட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (50) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News November 21, 2025
ஈரோடு: வாலிபர் தூக்குமாட்டி தற்கொலை

ஈரோடு பெரியவலசு துரைசாமி வீதியை சேர்ந்தவர் கார்த்தி (30). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் கார்த்தி அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்தபோது கார்த்தி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஈரோடு வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
ஈரோடு மக்களே இலவச தையல் மெஷின் வேண்டுமா?

ஈரோடு மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


