News December 6, 2024
ஈரோடு: வாடகை செலுத்தாத 74 கடைகளுக்கு நோட்டீஸ்

ஈரோடு ஜவுளி ஒருங்கிணைந்த வளாக கட்டிடத்தில், செயல்பட்டு வரும் கடைகளுக்கு, மாத வாடகையாக ரூபாய் 3,540, மாநகராட்சி மூலம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை செலுத்தாத 74 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரி மணிஷ் உத்தரவின் பேரில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு, நோட்டீஸ் நேற்று அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாடகை பாக்கி, ரூ.26 லட்சத்து 19ஆயிரத்தி 600 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.
Similar News
News October 14, 2025
ஈரோடு: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
News October 14, 2025
ஈரோட்டில் சோகம் வாலிபர் பலி

வெள்ளோடு அடுத்துள்ள கருக்கங்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ், 24. இவர் கீழ்பவானி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதில், அவர் வாய்க்கால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 நாளாக தேடி அவர் சடலமாக மீட்டனர். இது குறித்து வெள்ளோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 14, 2025
ஈரோடு அருகே ஆபாச பேச்சு: வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஜி எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த தமிழரசன் வயது(29) என்பவர் நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் மயூரன் ஆட்டோமொபைல்ஸ் என்ற பெயரில் இ-பைக் ஷோரூம் நடத்து வருகிறார்.அங்கு பணிபுரியும் இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியதாக தமிழரசன் மீது அம்மாபேட்டை போலீசில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் தமிழரசனை போலீசார் கைது செய்தனர்.