News August 14, 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை கிராம சபைக் கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை (ஆகஸ்ட் 15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுநிதி செலவினம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன கிராம ஊராட்சிகள் மூலம் தெரிவிக்கப்படும் என ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

கோபி: செங்கோட்டையனுடன் இணைந்தனர்!

image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து அக்கட்சியில் இருந்து விலகி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அபிஷேக் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.

News December 1, 2025

குண்டேரிப்பள்ளம் அணையில் மீன் பிடி உரிமைக்கு மின்னணு ஒப்பந்தம்

image

ஈரோடு மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குண்டேரிப்பள்ளம் நீா்த்தேக்கத்தின் மீன் பிடி உரிமையை 5 ஆண்டு காலத்துக்கு மீன் பிடி குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப் புள்ளி வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளங்கள்,மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணையதள மூலமாக டிச 10 தேதிக்குள் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

News December 1, 2025

ஈரோடு: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவையில், உட்கோட்ட அதிகாரிகளை வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவசர சேவை வழங்கப்படும் என காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!