News April 29, 2025
ஈரோடு மாநகராட்சியில் சலுகை பெற நாளை கடைசி

ஈரோடு மாநகராட்சியில் 2025-2026ம் நிதியாண்டிற்கான வரி செலுத்துவதில் 5 சதவீதம் ஊக்கத்தொகைபெற நாளை ஏப்.30ம் தேதி கடைசி நாளாகும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தப்படி, சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற நாளை கடைசி நாளாகும். எனவே, மாநகராட்சியின் அனைத்து வசூல் மையங்கள் இன்றும், நாளைக்கும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News July 11, 2025
ஈரோடு: ரேஷன் கார்டில் மாற்றமா..?

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் ஜூலை 12ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் நடைபெறவுள்ளது. இதில் புதிய குடும்ப அட்டை கோருதல், நகல் குடும்பஅட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
சித்தோட்டில் குட்கா விற்றவர் கைது!

ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கங்காபுரம் பகுதியில், வெங்கடேசன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 360 கிராம் எடையுள்ள ஹான்ஸ் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடை உரிமையாளர் மீதும் வழக்குப்பதியப்பட்டது.
News July 10, 2025
பெருந்துறையில் முதியவர் தற்கொலை

பெருந்துறை, மேக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (77). இவர் கடந்த 8 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி, கடந்த ஒரு வாரமாக நோய் பாதிப்பு அதிகமாக இருந்ததால், மனமுடைந்து, வீட்டில் பூச்செடிகளுக்கு பயன்படுத்த வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்