News April 21, 2025
ஈரோடு: மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி பலி!

ஈரோடு, அத்தாணி அருள்வாடிபுதூரைச் சேர்ந்தவர் முருகன் (55) கட்டிட தொழிலாளியான இவர் நேற்று மாலை பைக்கில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து, உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 23, 2025
ஈரோடு: PHONE தொலைந்து விட்டதா.. SUPER தகவல்

ஈரோடு மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கே<
News November 23, 2025
திம்பம் மலைப்பாதையில் விபத்து

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை 27 கொண்டைஊசி வளைவுகளை அடக்கியது. மலைப்பாதையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வாழைக்காய் பாரம் ஏற்றுக் கொண்டு மினி சரக்கு வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது 18-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
News November 23, 2025
ஈரோட்டில் வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன்படி காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டறிந்தனர். வீட்டிற்குள் சோதனை செய்தபோது ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தனுஷ் ,குரு பிரகாஷ் இருவரை கைது செய்தனர்.


