News April 28, 2025
ஈரோடு: மதுக்கடைகளுக்கு விடுமுறை

தொழிலாளர் தினமான மே மாதம் 1-ம் தேதி, மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மே 1-ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அறிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

“படியில் பயணம் நொடியில் மரணம்” பயணம் என்பது பேருந்துகள் அல்லது ரயில்களின் படிக்கட்டுகளில் தொங்கிச் செல்வதன் ஆபத்துகளை உணர்த்தும் ஒரு பிரபலமான எச்சரிக்கை வாசகம். இது, படிக்கட்டுப் பயணத்தால் ஏற்படும் எண்ணற்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டி, பாதுகாப்பாக பேருந்தின் உள்ளே பயணம் செய்ய பொது மக்களுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
News December 6, 2025
ஈரோடு: மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

ஈரோடு அடுத்த திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில், மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்.
News December 6, 2025
கொடுமுடி அருகே ரயில் மோதி ரேஷன் கடை ஊழியர் பலி

கொடுமுடி அருகே கருவேலாம்பாளையத்தை சேர்ந்த கர்ணன் (60) ரேஷன் கடை பணியாளார். நேற்று காலை இயற்கை உபாதைக்காக ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது, ஈரோடு–திருச்சி பயணிகள் ரயில் மோதி உயிரிழந்தார். அவருக்கு சரிவர காது கேளாதவர் என்பதும் தெரியவந்தது. தகவலின் பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


