News March 19, 2024
ஈரோடு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் 4 பகுதியில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வாரந்தோறும் அரசு விடுமுறை நாட்கள் தவிர திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஏலம் நடக்கிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையான 25 ஆம் தேதி, பண்ணாரி அம்மன் திருவிழா 26 ஆம் தேதி, புனித வெள்ளியை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி மஞ்சள் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
நீதியை நிலைநாட்டும் கொங்கலம்மன்!

கொங்கு மண்டலத்துக்கே காவல் தெய்வமாகத் திகழ்பவள் கொங்கலம்மன். ஈரோடு, மணிக்கூண்டு பகுதிக்கு அருகில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது என்பதற்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளும் உள்ளன. இங்கு சீட்டு எழுதியும், பூ போட்டும் அருள்வாக்கு கேட்கும் வழக்கம் நிலவி வருகிறது. இங்கு கொங்கலம்மனை வழிபட்டால், எந்த ஒரு பிரச்னைக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE IT!
News April 19, 2025
கலைஞர் காப்பீட்டு திட்ட மருத்துவ அட்டை வழங்கும் முகாம்

கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காப்பீட்டு அட்டை வழங்கும் முகாம் வருகின்ற 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கொண்டு வந்து மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறுமாறு பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் அறிவித்துள்ளார்
News April 19, 2025
ஈரோடு: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️ஈரோடு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் 0424-2266266.▶️ மாவட்ட வருவாய் அலுவலர் 0424-2266333. ▶️மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 0424-2260999. ▶️ சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0424-2260455. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0424-2252052. ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 0424-2275860. ▶️மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் 0424-2223157. இத SHARE பண்ணுங்க.