News May 16, 2024
ஈரோடு புத்தகத் திருவிழா தேதி அறிவிப்பு

ஈரோடு மாவட்ட நிா்வாகம் மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படும், ஈரோடு புத்தகத் திருவிழா, இந்த ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்டு 13 வரை 12 நாட்களுக்கு ஈரோடு மாநகரில் நடைபெறவுள்ளது. மேலும் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா – புத்தகத் திருவிழாவின் 20ஆம் ஆண்டு ஆகிய காரணங்களினால் இந்த ஆண்டு கூடுதல் சிறப்புடன் புத்தக திருவிழா நடத்தப்படவுள்ளது.
Similar News
News November 11, 2025
ஈரோடு: நல்ல சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

ஈரோட்டில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Civil Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு சிவில் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ முடித்தவர்கள் <
News November 11, 2025
பவானி: தாயை கல்லால் அடித்துக் கொலை செய்த மகன்

பவானி அருகே மயிலம் பாடி சானார் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராக்கம்மாள்(65) என்பவரை அவரது மகன் பழனிச்சாமி 45 என்பவர் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். உயிரிழந்த ராக்கம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணைக்கு பின்னர் பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
News November 11, 2025
ஈரோடு: சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை

ஆன்லைன் டாஸ்க் என்பது இணையம் சார்ந்த குற்றங்களைக் குறிக்கிறது, இதில் கணினிகள் மற்றும் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி மோசடி, அடையாள திருட்டு போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் அல்லது Cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


