News April 17, 2025
ஈரோடு: தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை!

ஈரோடு ஈஸ்வரன் கோவில், ஸ்ரீ ரங்கா வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் (72). ஜவுளி தொழில் செய்து வந்த இவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கத்தியை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 15, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 15, 2025
ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க
News November 15, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் அதிகளவில் பாரங்களை ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி பாரங்கள் ஏற்றுவது வாகனங்களுக்கு சேதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் நிலையை உருவாக்குகிறது. எனவே எடை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட போலீசார் வாகன ஓட்டுநர்களை அறிவுறுத்தியுள்ளனர்.


