News March 21, 2024
ஈரோடு தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுக-வுக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார். இந்தத் தேர்தலில் தி.மு.க. இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான்.
Similar News
News December 2, 2025
ஈரோட்டில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில் அரசு சார்பில், வரும், 6ம் தேதி காலை, 8 முதல் 4 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். கூடுதல் விபரத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 86754-12356 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஈரோடு மக்களே யாருக்காவது நிச்சயம் உதவும் கண்டிப்பாக அதிகம் SHARE பண்ணுங்க!
News December 2, 2025
ஈரோடு: மின் இணைப்பு இருக்கா? முக்கிய தகவல்

ஈரோடு ஈ. வி. என் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட அலுவலகத்தில் நாளை டிச.3 காலை 11 மணிக்கு மின் பயனீட்டாளர்கள் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் ஈரோடு நகர், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், மேட்டுக்கடை, சித்தோடு ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தகவல்.
News December 2, 2025
ஈரோட்டில் காதல் செய்பவர்களுக்கு எச்சரிக்கை!

ஆன்லைன், டேட்டிங் ஆப்ஸ் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகம் இல்லாதவர் காதல் செய்வதாக தொடர்பவர்களை நம்ப வேண்டாம் . இதில் மோசடி போன்ற அபாயங்கள் உள்ளன. உங்கள் உணர்வுகளை தவறாகப் பயன்படுத்தப்பட்டு பண மோசடிகளுக்கும் வழி வகுக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு செய்தனர். SHARE பண்ணுங்க!


