News January 2, 2025

ஈரோடு: கீழே விழுந்து மின் ஊழியர் பலி!

image

கோபி அருகே கொளப்பள்ளூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் கெட்டி செவியூர் மின்வாரிய அலுவலகத்தில், பணியாற்றி வருகிறார். கெட்டிசெவியூர் அரசு பள்ளி அருகே உள்ள, மின் கம்பத்தில், பழுது பார்க்க ஏறும் போது, 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தவர், தலையில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

ஈரோடு: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

image

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.

▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்

▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக்.

News September 17, 2025

ஈரோடு: யானை மிதித்து ஒருவர் பலி!

image

ஈரோடு: கடம்பூர் மலை கிராமம் ஏலஞ்சியைச் சேர்ந்தவர் பிரபு (35). இவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். நள்ளிரவு வாழைத் தோட்டத்திற்குள் யானைகள் நிற்பதை கண்டு அருகிலுள்ளவர்களுக்கு தகவல் அளித்து விட்டு அதை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் எதிர்பாராத நேரத்தில் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News September 16, 2025

ஈரோட்டில் வெளுத்து வாங்க போகும் மழை! ALERT

image

ஈரோடு மாவட்டத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.16) 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையாக இருக்க அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!