News December 4, 2024

ஈரோடு கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

image

கோவை, திருப்பூர், ஈரோட்டைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பக்கலைஞர்கள் தங்களது படைப்புகளை சந்தைப்படுத்தி, காட்சிப்படுத்தி பரிசுகளை அள்ளலாம். இதில் முதல் 7 கலைஞர்களுக்கு ரூ.5000, 2ஆம் பரிசு ரூ.3,000, 3ஆம் பரிசு ரூ.2000 வழங்கப்படும். இதற்கு தங்களது படைப்புகளை டிச.10ஆம் தேதிக்குள் மண்டல கலை பண்பாட்டு மையம், அரசு இசைக்கல்லூரி வளாகத்திற்கு அனுப்பவும். மேலும், விவரங்களுக்கு 94422-13864 என்ற எண்ணை அழைக்கலாம்.

Similar News

News November 9, 2025

நம்பியூர் அருகே சோகம்

image

நம்பியூா் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தாமணி. இவர் கவுன்சிலராக உள்ளாா். இவரது கணவா் குமாரசாமி. இவர் கடந்த 6-ம் தேதி எலத்தூரில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 9, 2025

சத்தியமங்கலம் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

image

சத்தி நகராட்சியில் புதிதாக கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில், பலா் அதற்கு சொத்துவரி விதிப்பு செய்யப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். மேலும் வீட்டில் மேல்பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கும் சொத்துவரி செய்யப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளதால், அதனை விரைவில் செலுத்த சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் வெங்கடேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 9, 2025

பனை விதை நடும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்

image

பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் மூலம் நடைபெற்ற சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 முன்னிட்டு வேளாண்மை வளாகத்தில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் 2000 பனை விதைகள் இன்று நடப்பட்டது அந்தியூர் பவானி கீழ்வாணி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.

error: Content is protected !!