News August 6, 2024

ஈரோடு கலெக்டர் அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், ஊரக பகுதி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் 2016-17 முதல் 2021-22 வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகள் மற்றும் ஆவணங்களை சமூக தணிக்கை மேற்கொண்டு சமூக தணிக்கை வரும் 9ஆம் தேதி நிறைவு பெறுகிறது. அன்றைய தினம் 13 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை நடைபெற உள்ளது. அதற்கான இடம், நேரம் தொடர்புடைய கிராம ஊராட்சி மூலம் அறிவிக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 5, 2025

ஈரோட்டில் இன்று முதல் அனுமதி வழங்கல்

image

கோபி அருகே கொடிவேரி அணைக்கட்டு மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இந்த அணைக்கட்டு பகுதியில் கடந்த 15நாட்களுக்கு முன்னர் பெய்த கன மழையால் நீர் வரத்து அதிகமாக வந்ததால் மறு அறிவிப்பு வரும் வரை அணை தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது நீர் வரத்து குறைந்ததால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல அணை திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News November 5, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

சாலை விதிகளை மதிப்போம், பாதுகாப்பாக பயணிப்போம் சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலம் சாலை விபத்துகளைத் தவிர்த்து, உயிர் மற்றும் உடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம். தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதிருத்தல், செல்போன் உபயோகத்தைத் தவிர்த்தல், மற்றும் போக்குவரத்து சிக்னல்களைப் பின்பற்றுதல் போன்ற விழிப்புணர்வை ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

News November 4, 2025

ஈரோடு மாவட்ட இரவு காவலர் ரோந்து பணி விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!