News April 20, 2025

ஈரோடு: ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு, நலவாரியங்களில் பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை இந்த <>லிங்க்<<>> மூலம், உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

Similar News

News December 9, 2025

ஈரோட்டில் கொடூரக் கொலை: கணவன் கைது

image

பெருந்துறை காஞ்சிகோயில் சாலையில் கடந்த 7ம் தேதி காஞ்சிபுரம் ரோட்டை சேர்ந்த விஜயா என்பவர் கழுத்தில் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதில் ஏற்கனவே விவாகரத்தான விஜயாவின் கணவர் செங்கோட்டையனுக்கும் இவருக்கும் ஜீவனாம்சம் பெறுவதில் தகராறு இருந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட செங்கோட்டையன் சாலையில் வைத்து கழுத்தில் குத்தி கொலை செய்தார் இந்த வழக்கில் செங்கோட்டையனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

News December 9, 2025

​சென்னிமலை அருகே சோகம்: விவசாயி பலி

image

​சென்னிமலை அடுத்த கவுண்டனூரைச் சேர்ந்தவர் மாகாளி (63). விவசாயக் கூலியான இவர், கடந்த 6-ம் தேதி காலை அங்குள்ள வயல்வெளியில் மயங்கிக் கிடந்தார். தகவலறிந்து வந்த மகன் பாலகிருஷ்ணன், அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். பரிசோதனையில் அவருக்குத் தலையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மாகாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 9, 2025

சென்னிமலை: மகளுக்கு பாலியல் தொல்லை தந்தை கைது

image

சென்னிமலை அருகே 16 வயது சிறுமிக்கு, அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தாய் வங்கி வேலைக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து, சிறுமி தாய்க்கு தகவல் அளித்தார்.​உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்ட தாய், சென்னிமலை போலீசில் புகாரளித்தார். இதன் பேரில் வளர்ப்புத் தந்தை மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!