News August 17, 2024
ஈரோடு இன்றைய தலைப்பு செய்திகள்

➤ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு நாளை மறுநாள் விடுமுறை
➤ரூ.1,919 கோடி அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
➤முதல்வர் கோப்பை போட்டி, ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் தகவல்
➤ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் வாட்ஸ்அப் சேனல் https://whatsapp.com/channel/0029Va706tD
➤ஈரோட்டில் 500 மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்
Similar News
News November 21, 2025
ஈரோட்டில் அதிகபட்ச வெயில் பதிவு

தமிழ்நாட்டில் நேற்று (20-11-25) அதிக அளவாக, ஈரோட்டில் 95.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 35.2 டிகிரி செல்சியஸ் வெயில் (95.36 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.
News November 21, 2025
ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை – 7 ஆண்டு சிறை!

ஈரோடு, சித்தோடு கொங்கம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (69). 8.7.2024 அன்று கோவிலுக்கு வந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக்கம்பக்கத்தினர் கண்டு சிறுமியை மீட்டு பவானி மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் அவரை கைது செய்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணகுமார் சுப்பிரமணிக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்ததுடன், சிறுமிக்கு ரூ.3 லட்சம் நஷ்டஈடு வழங்க பரிந்துரைத்தார்.
News November 21, 2025
அந்தியூர் அருகே திருநங்கை தற்கொலை

அந்தியூர் அருகே கழுதைப்பாலி கிராமத்தைச் சேர்ந்த திருநங்கை ரபியா (27) கடந்த சில மாதங்களாக ஒருவருடன் கைப்பேசியில் பேசிவந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு திடீரென அறைக்குள் சென்று ரபியா சேலையால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டாலும், மருத்துவமனையில் அவர் இறந்ததாக கூறப்பட்டது. அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


