News April 24, 2024
ஈரோடு ஆட்சியர் அழைப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மெட்ரிக், சுயநிதி, துவக்க மற்றும் மழலையர் பள்ளியில், குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக இன்று (ஏப்ரல் 22ஆம் தேதி) முதல் மே 20ஆம் தேதிக்குள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில், தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
போதை மாத்திரையை சிரஞ்சு மூலம் ஏற்றிய ஐவர் கைது
அந்தியூர்வெள்ளப்பிள்ளையார் கோயில் அருகே இன்று 5 பேர் கொண்ட கும்பல் போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சு மூலம் ஏத்தியதாக ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐக்கு செபஸ்தீயான் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.
News November 20, 2024
ஈரோடு வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
ஈரோட்டில் 20.11.2024 அன்று நடைபெற இருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மீண்டும் 22.11.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 20, 2024
சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
சத்தியமங்கலம் கரட்டூர் பூ மார்க்கெட் இயங்கிவருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்றும் (நவ. 20) பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு சத்தியமங்கலம்,சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நிலவரம்:கிலோக்கு மல்லிகை: 1200/1900 முல்லை: 720/850 காக்கடா: 550/650 க்கு விற்பனையானது.