News November 24, 2024

ஈரோடு அருகே விபத்து

image

கோபி அருகே அக்கரைகொடிவேரி பகுதியில், நேற்று மாலை சத்தியமங்கலம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலை நடுவே உள்ள தடுப்பு கற்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணித்த 3 பேர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 11, 2025

ஈரோடு: டிகிரி போதும் ரூ.63,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள 16 உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ் பிரிவு எழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,000 முதல் ரூ.63,200, 1,12,400 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள், <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News August 11, 2025

ஈரோட்டில் இலவச லாரி ஓட்டுநர் பயிற்சி! APPLY NOW

image

ஈரோட்டில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி ஓட்டும் பயிற்சி, பாதுகாப்பு, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 11, 2025

அந்தியூர்: அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பலி

image

அந்தியூர் பள்ளிபாளையம் சர்வஜோதி நகரை சேர்ந்தவர் குப்புசாமி (52). அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர். இவர் வீட்டில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல் சிகிச்சைக்காக பெருந்துறைக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி உயிரிழந்தார். அந்தியூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!