News March 21, 2024

ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

image

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

Similar News

News March 12, 2026

ஈரோடு: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in <<>>என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 12, 2026

ஈரோடு: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

ஈரோடு மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

News March 12, 2026

ஈரோட்டில் சோகம்: கல்லூரி மாணவி தற்கொலை!

image

ஈரோடு மாவட்டம், கோபி அரக்கன்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருடைய மகள் ஸ்ரீமதி (19). இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வில் தோல்வி அடைந்ததால் தந்தை திட்டுவார் என்று நினைத்து விஷம் குடித்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீமதி உயிரிழந்தார். பங்களாப்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!