News March 21, 2024
ஈரோடு அருகே ரூ.35 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் பயணி ஒருவர் ரூ.35 லட்சம் பணம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் தாவணிகரையை சேர்ந்த ஹரிஷ் என்பதும் கோவையில் இடம் வாங்கிய நபருக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
Similar News
News November 20, 2025
ஈரோடு வருகை தந்த உலககோப்பை!

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் முதன்முறையாக தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான வெற்றி கோப்பை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் புஞ்சை புளியம்பட்டிக்கு வருகை தந்த உலக கோப்பைக்கு துணை ஆட்சியர் சிவானந்தம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோப்பை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
News November 20, 2025
ஈரோடு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News November 20, 2025
ஈரோடு : ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர்.இந்த சிக்கலை தீர்க்க <


