News March 29, 2024

ஈரோடு வருகை தரும் முதல்வர்

image

2024 மக்களவை தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, மார்ச் 31ஆம் தேதி ஈரோடு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்; திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து  சின்னியம்பாளையத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News

News December 21, 2025

பண்ணாரியில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

பண்ணாரி கோவிலுக்கு கோபி பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி (44) இருசக்கர வாகனத்தில் சாமி கும்பிட சென்றுள்ளார். கோயில் முன்பு நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்து விட்டு வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாததால் சத்தி போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வாகன சோதனையில் ரமேஷ் குமார் (32) என்ற நபரை பிடித்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 21, 2025

சிவகிரி அருகே சோகம்: இளம்பெண் உயிரிழப்பு!

image

சிவகிரி அடுத்த தாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நதியா (26). இவருடைய கணவர் கவுதம். நதியா வீட்டில் ஐடி வேலை பார்த்து வந்தார். நள்ளிரவு 2 மணி வரை வேலை பார்த்த அவர் பின்னர் தூங்கச் சென்றுவிட்டார். காலை 11 மணி அளவில் அவரை எழுப்பிய போது அசைவற்று இருந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நதியா உயிரிழ்ந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News December 21, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!