News May 16, 2024

ஈரோடு: தாய் கழுத்தறுத்து கொலை

image

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே விஜயகுமார் என்பவர் நேற்று தனது தாய் சுசீலாவை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சித்தார். இதில், காயமடைந்த சுசீலாவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து விஜயகுமார் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News September 13, 2025

சென்னிமலை அருகே பஞ்சுமில் தீப்பிடித்து எரிந்து நாசம்

image

சென்னிமலை டவுன் அம்மாபாளையம் பகுதியில் வசிப்பவர் சண்முகசுந்தரம் இவருக்கு சொந்தமான நூல் மில் சென்னிமலை , முருங்கத்தொழுவு ஊராட்சி தண்ணீர் பந்தலில் உள்ளது. இங்கு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கப்படுகிறது. நேற்று மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு மில் முழுவதும் மல மல தீ பரவியது. உடனடியாக சென்னிமலை தீ அணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் தீ அணைக்கும் முன்பே எரிந்து விட்டது.

News September 13, 2025

ஈரோடு: அறிவித்தார் ஆட்சியர் IMPORTANT!

image

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக பட்டாசு உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யவும் உரிமங்களை பெற சேவைக் கட்டணமாக ரூ.600 செலுத்தி வரும் 10.10.2025 வரை விண்ணப்பம் செய்து தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரர்கள் இணையம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் தெரிவித்துள்ளார். SHAREIT

News September 13, 2025

பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்

image

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று (13.09.2025) 10 தாலுக்காவிலும் மேற்கண்ட படத்தில் உள்ள இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் புதிய குடும்பஅட்டை கோருதல், நகல் குடும்பஅட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கைபேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என ஈரோடு ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!