News April 26, 2024
ஈரோடு: தந்தத்திற்காக யானை வேட்டையா ?
தாளவாடி அடுத்த கும்டாபுரம் வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண் யானை அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து யானையின் உடல் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது யானையின் தந்தங்கள் இல்லாதது தெரியவந்தது. இதனால் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டதா?அல்லது வேறு காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 20, 2024
ஈரோடு தலைப்புச் செய்திகள்
1.அந்தியூரில் போதை மாத்திரையை சிரஞ்சு மூலம் ஏற்றிய ஐவர் கைது
2.ஈரோடு வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22தேதிக்கு ஒத்திவைப்பு
3.சத்தியமங்கலத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
4.சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு
5.அதிமுகவில் இணைந்த முன்னாள் திமுக கவுன்சிலர்
News November 20, 2024
போதை மாத்திரையை சிரஞ்சு மூலம் ஏற்றிய ஐவர் கைது
அந்தியூர்வெள்ளப்பிள்ளையார் கோயில் அருகே இன்று 5 பேர் கொண்ட கும்பல் போதை மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சு மூலம் ஏத்தியதாக ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐக்கு செபஸ்தீயான் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை கைது செய்து அந்தியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.
News November 20, 2024
ஈரோடு வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
ஈரோட்டில் 20.11.2024 அன்று நடைபெற இருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மீண்டும் 22.11.2024 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.