News June 25, 2024

ஈரோடு எம்.பி. பிரகாஷ் பதவியேற்பு

image

ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரகாஷ், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

Similar News

News October 31, 2025

ஈரோடு: குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு

image

ஈரோடு மாவட்ட காவல்துறையினர் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்திய சட்டப்படி, பெண்கள் 18 வயது, ஆண்கள் 21 வயது ஆனதற்கு முன் திருமணம் செய்யக்கூடாது. இளம் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவதால், சமூகத்தில் இதனை தடுப்பது முக்கியம். குழந்தை திருமணத்தின் எதிர்மறை விளைவுகள், கல்வி மற்றும் உடல் நலத்திற்கு பாதிப்பு குறித்து மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

News October 30, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News October 30, 2025

ஈரோடு காவல்துறை எச்சரிக்கை!

image

ஈரோடு மாவட்ட காவல்துறையினர் இணையத்தில் விளம்பரப்படுத்தப்படும் வர்த்தக தள்ளுபடிகளை நம்பி ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மிகவும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் சில சமயங்களில் மோசடியின் அறிகுறியாக இருக்கலாம். தவறான விளம்பரங்களில் சிக்காமல் இருக்கும் வழிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு, சந்தேகங்கள் ஏற்பட்டால் இலவச தொலைபேசி 1930 இல் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!