News April 24, 2025
இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 17, 2025
நாகையில் இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு நாகை EGS பிள்ளை கல்லூரி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நாளை (நவ.18) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சர்க்கரை, ரத்த கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி, வயிற்றுப்புண், தோல் வியாதிகள், ஆஸ்துமா, சைனஸ், முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இயற்கை மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
நாகை: B.E படித்தவர்களுக்கு வேலை

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 Specialist Officers (SO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.64,820 – 1,20,940/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate
5. வயது வரம்பு: 22-40 (SC/ST-45, OBC-43)
6. கடைசி தேதி: 30.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 17, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை (நவ.18) காலை 10 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


