News April 24, 2025
இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா?

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!
Similar News
News September 15, 2025
அரியலூர்: தீராத நோய் தீர்க்கும் வைத்தியநாதர்

அரியலூர் மாவட்டம், திருமழபாடி எனும் ஊரில் வைத்தியநாதர் கோவில் அமைந்துள்ளது. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, மூலவர் வைத்தியநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்று கூறப்படுகிறது. வாழ்வில் நோயின்றி வாழ்வதற்கு இந்த கோவிலுக்கு செல்லுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரவும்.
News September 15, 2025
அரியலூர் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநருமான மு.விஜயலெட்சுமி தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நடைபெற்றது.
News September 15, 2025
அரியலூர்: 354 மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 354 மனுக்களை பொது மக்களிடம் இருந்து பெற்ற மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.