News April 24, 2025
இ-சேவை மையத்தில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதிகளா ?

உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 22, 2025
திருவாரூர்: நீரில் மூழ்கிய 5000 ஏக்கர் சம்பா!

நன்னிலம், திருக்கண்டீஸ்வரம், தூத்துக்குடி, மணவாளம்பேட்டை, அதம்பாவூர், அச்சுதமங்கலம், சரபோஜிராஜபுரம், வெள்ளை அதம்பார், மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகத் தொடங்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News October 22, 2025
திருவாரூர்: மழையால் இடிந்து விழுந்த 4 வீடுகள்!

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, திருவாரூர் மாவட்டாரம் பெருங்குடி கிராமத்தில் தெற்கு தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. மேலும் அதே பகுதியில் ஜெயபாரதி, சுபஸ்ரீ, செல்வமணி ஆகிய 3 பேரின் கூரை வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.
News October 21, 2025
BREAKING: திருவாரூர் நாளை விடுமுறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதன் காரணமாக திருவாரூரில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.