News April 24, 2025
இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 5, 2025
சென்னையில் நாளை மினி மாரத்தான்

சர்வதேச கூட்டுறவு நாளை முன்னிட்டு, கூட்டுறவுத்துறை சார்பில் ‘COOP-A-THON’ மினி மாரத்தான் போட்டி சென்னை தீவுத்திடலில் நாளை (ஜூலை 6, ஞாயிறு) காலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. “சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம்” என்ற மையக்கருத்தில் 5 கி.மீ. தூரத்திற்கான இந்த ஓட்டப்பந்தயத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.
News July 5, 2025
பல் துலக்கும்போது தண்ணீரைச் சேமிக்க அறிவுறுத்தல்

சென்னை குடிநீர் வாரியம் பல் துலக்கும்போது தண்ணீரைச் சேமிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஓடும் குழாய்க்குப் பதிலாக குவளையைப் பயன்படுத்தினால் ஒருமுறைக்கு 4.25 லிட்டர் தண்ணீரைச் சேமிக்கலாம். ஓடும் குழாய் 5 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் நிலையில், குவளை வெறும் 0.75 லிட்டர் மட்டுமே பயன்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணி தீவிரம்

சென்னை மாவட்டத்தில் வெள்ளத்தடுப்புப் பணிகளைத் தமிழக அரசு ரூ.338 கோடி மதிப்பில் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஆலந்தூர் வட்டம் மற்றும் சின்னம் பகுதிகளில் ரூ.9.4 கோடி மதிப்பில் தடுப்புச் சுவர் மற்றும் உள்வாங்கி நீரோட்டச் சுவர் அமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் வெள்ள சேதங்களைக் கட்டுப்படுத்த உதவும்.