News April 24, 2025
இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். ஆனால், இவற்றை வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும்.
Similar News
News December 27, 2025
தி.மலை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் எண்கள்

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. தி.மலை DSP-04175-232619, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, தி.மலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-9894599260. யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News December 27, 2025
செங்கம் : முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.

செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் எ.வ.வேலுவிற்கும் அப்பகுதி பொதுமக்கள் இன்று தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். புதிய கட்டட வசதி மூலம் அப்பகுதி மாணவர்களின் உயர்கல்வித் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 27, 2025
தி.மலையில் மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர்

திருவண்ணாமலையில் அரசு மாதிரி பள்ளியை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடியனார். உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு துணை சபாநாயகர் பிச்சாண்டி எம்பி அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.


