News April 24, 2025
இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். ஆனால், இவற்றை வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும்.
Similar News
News March 12, 2026
ராணிப்பேட்டையில் சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 12, 2026
ராணிப்பேட்டையில் ரூ.5,000 வேண்டுமா..?

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.
News March 12, 2026
வாலாஜா அருகே பரிதாப பலி!

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை தாலுகா கல்மேல்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரி(48). கட்டுமானத் தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் வழக்கம் போல் பணிக்குச் சென்று விட்டு மாலை தனது உறவினருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அம்மூர், அள்ளிக்குளம் அருகே சென்ற போது தீடீரென பைக்கில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.


