News March 24, 2025
இஸ்லாமியர்களை சித்தப்பா என அழைப்பேன் – ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையத்தில் SDPI கட்சி சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நோன்பு கஞ்சி அருந்தினார். பின்னர் பேசிய அவர் இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. இஸ்லாமியர்களை நான் சித்தப்பா என அழைப்பேன், அவர்கள் என்னை மகன் என அழைப்பார்கள் என பேசினார்.
Similar News
News December 2, 2025
விருதுநகர்: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்க வழி இருக்கு. இந்த <
News December 2, 2025
அருப்புக்கோட்டை அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்(36). கண்டெய்னர் லாரி ஓட்டுனரான ஜெயக்குமார் தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி லாரியை ஓட்டி சென்று கொண்டிருந்த போது அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் இன்று டிச.2 அதிகாலை லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. ஜெயக்குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்
News December 2, 2025
விருதுநகர் அருகே வழுக்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் முனியசாமி(25). இவர் அருகே உள்ள கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று டிச.1 முனியசாமி கடையை கழுவி கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து காயம் அடைந்து மயங்கினார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முனியசாமி உயிரிழந்தார். டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


