News March 20, 2024
இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க<
Similar News
News November 20, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்! POST OFFICE-யில் வேலை!

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
1. வகை: மத்திய அரசு
2. கல்வித் தகுதி:ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 12-35
4. கடைசி தேதி: 01.12.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 20, 2025
காரைக்காலில் சிறுபான்மையினர் விழா அமைச்சர் பங்கேற்பு

சிறுபான்மையோர் தின விழா இன்று (20.11.2025) தருமபுரம் மேல புத்தமங்கலம் இமாக்குலேட் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் திருமுருகன், எம்எல்ஏ ராஜசேகரன் கலந்துகொண்டனர். இதில் காரைக்கால் மகளிர் மேம்பாட்டு துறை நலத்திட்ட அதிகாரி, கிருஷ்ணவேணி, கல்லூரி முதல்வர் அருட் சகோதரி காணிக்கை ஆரோக்கியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
News November 20, 2025
காரைக்கால் மருத்துவமனை முன்பு சாலை மறியல்

காரைக்காலில் விழிதியூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா என்கின்ற நபர் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த கருப்பையா மீது காரைக்கால் போக்குவரத்து போலீசார் அதிவேகமாக வந்ததாகவும், அவர் மது அருந்திவிட்டு வந்ததாகவும் பொய்யான வழக்கை பதிவு செய்ததை கண்டித்து,, உயிரிழந்த கருப்பையா உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் காரைக்கால் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


