News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Similar News
News January 7, 2026
தி.மலையில் இலவச பஸ் பாஸ்- யாருக்கு தெரியுமா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2026ஆம் ஆண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. வரும் ஜன.7 – ஜன.31ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலத்தில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார். அரசு விடுமுறை நாட்களில் அலுவலங்கம் செயல்படாது. ஷேர் பண்ணுங்க.
News January 7, 2026
தி.மலையை உலுக்கும் கொடூர கொலை!

ஆரணி பகுதியை சேர்ந்த டேனி வளனரசு(19). வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் BA படித்துவந்தார். இவருடன் நண்பர்கள் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), இன்பவர்மா (18) ஆகியோர் தங்கி படித்து வந்துள்ளனர். ஒரே பெண்ணை வளனரசுவு, கிஷோர் கண்ணன், பார்த்தசாரதி ஆகியோர் காதலித்த நிலையில், மது போதையில் டேனியை கொன்று ஆந்தரவில் உள்ள காட்டில் சடலத்தை வீசி உள்ளனர். 3 பேரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 7, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஜன.6 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


