News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Similar News
News November 8, 2025
திருச்செந்தூர் கடற்கரையில் தங்க இனி அனுமதி இல்லை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி வந்த நிலையில், திருட்டு மற்றும் பொருள்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் காரணமாக கடற்கரையில் இரவு யாரும் கடற்கரையில் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 8, 2025
தூத்துக்குடி: ஒரே நாளில் மூன்று பேர் மீது குண்டாஸ்

கோரம்பள்ளம் அருகே உள்ள புதுக்கோட்டையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்கில் மேல வாகை குலத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் சுடலைக்கண்ணு இசக்கி பாண்டி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனை அடுத்து இந்த மூன்று பேரையும் புதுக்கோட்டை போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
News November 8, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 20 ஆண்டு சிறை

கோவில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கயத்தாறை தேர்ந்த காளீஸ்வரன் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இவர் மீதான வழக்கில் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் காளீஸ்வரனுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.


