News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: இன்றே கடைசி நாள்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: <
Similar News
News October 15, 2025
குடியாத்தம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தலைமை மருத்துவமனையை ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (அக்.15) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) பியூலா ஆக்னஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுடலைமுத்து, வட்டாட்சியர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.
News October 15, 2025
வேலூர் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் கைது

வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இ பிரிவில் ஏழுமலை பணியாற்றி வந்துள்ளார். வேலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வன பாதுகாவலராக பணி செய்து ஓய்வு பெற்ற ஜெயவேல் உயிரிழந்த நிலையில் அவருக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க ஏழுமலை ஜெயவேலின் மனைவியிடம் 10 ஆயிரம் லஞ்சமாக பெறும்போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடிபட்டார். ஏழுமலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 15, 2025
வேலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

வேலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <