News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: இன்றே கடைசி நாள்
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Similar News
News November 19, 2024
தமிழக ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை இயக்குனர் வருகை
ஆறாவது நிதிக்குழுத் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழு ராமநாதபுரம் நகர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நாளை ஆய்வு செய்ய உள்ளனர். இக்குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்ய தமிழக ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா இன்று ராமநாதபுரம் வந்தார். அவரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். கூடுதல் இயக்குனர் சுமதி, கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங் உடனிருந்தனர்.
News November 19, 2024
ஆறாவது நிதிக்குழுவினரின் பயணத்திட்டம்
நாட்டின் 6 ஆவது நிதிக் குழுத்தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையில் குழுவினர் நாளை (நவ.20) ராமநாதபுரம் வருகின்றனர். இக்குழுவினர் இன்றிரவு 7 மணியளவில் ராமநாத சுவாமியை தரிசனம் செய்கின்றனர். நாளை காலை 6 – 8 மணி வரை தனுஷ்கோடி செல்கின்றனர். 10:15 – 11:15 மணி வரை ராமநாதபுரம் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள், மதியம் 12:45 மணியளவில் கீழடி அகழாய்வு பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
News November 19, 2024
ரூ.10.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
கூட்டுறவுத்துறை சார்பில், 71 ஆவது கூட்டுறவு வார விழா இன்று(நவ.19) ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. இதில் ரூ.10.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் இணைப்பதிவாளர் ஜினு உள்பட பலர் பங்கேற்றனர்.