News March 20, 2024

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

Similar News

News September 15, 2025

தென்காசியில் அன்பு கரங்கள் திட்ட தொடக்க விழா

image

தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (செப்.15) அன்பு கரங்கள் திட்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. காலை 10.30 நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

News September 15, 2025

தென்காசி: ஆற்றில் விழுந்த விவசாயி உயிரிழப்பு

image

தென்காசி, ஆலங்குளம் அருகே மருதப்பபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுடலைக்கண்ணு (61) விவசாயி. இவர் நேற்று குறிப்பன்குளம் சிற்றாற்றில் குளிக்க சென்ற போது ஆற்றில் தவறி விழுந்ததில் மூச்சுத்திணறி உயிரிழந்தார். தகவலறிந்த ஆலங்குளம் போலீசார் விவசாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து போலீசார் விசாரணை.

News September 15, 2025

தென்காசி: ஆட்சியரின் போலி கையொப்பம் மூலம் மோசடி!

image

தென்காசி மாவட்டம், கடையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று பேரிடம் தலா 3 லட்சம் மோசடி செய்து தென்காசி மாவட்ட ஆட்சி தலைவரின் போலி கையொப்பமிட்டு ஆணை வழங்கிய விருதுநகரை சேர்ந்த நாகராஜந்திரகுமார் மற்றும் போலி ஆணை தயாரித்து வழங்கிய ரமேஷ் ஆகிய இருவரை கடையம் போலீசார் கைது செய்துள்ளனர். இது மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் செல்வகுமார் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

error: Content is protected !!